மியூசிக் தெரபி என்பது என்ன?

music

இசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி.அது சினிமா பாடல்களாக இருந்தாலும் சரி.. அது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியம்.சுறுசுறுப்பு குறைவாக இருப்பவரை வேகமான பாடல்களை கேட்க வைத்தால் உற்சாகமாகிவிடுவார். பதற்றமாக இருப்பவரை கொஞ்சம் நிதானப்படுத்த அதற்கு தகுந்த மாதிரி இசையை கையாண்டால் கூடுதல் பலன் கிடைக்கும், இரவு நேரத்தில் உற்சாகமான பாடல்களை கேட்டால் தூக்கம் வராது.இந்த பரபரப்பான வாழ்க்கையில் தினமும் அரை மணிநேரம் தியானம் போல இசையை அனுபவித்து செய்தால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். பாடல்கள் கேட்பதை போல நமக்கு பிடித்த இசைக் கருவிகளை வாசிக்கலாம், பாடல்களை பாடலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*