உலக இதய தினம்! – விழிப்பு உணர்வு அவசியம்

heartlogo

இதயநோயாளிகளின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வந்தன. இன்று 25 வயதினருக்குக்கூட வருகின்றன. இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை முக்கியக் காரணம்.நாம் வாழும் இடம், பணிபுரியும் சூழல் என ஒவ்வொன்றும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. குழந்தைகளும் பெரியவர்களும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுகின்றனர். போதுமான பசுமையான இடங்கள் இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவு, உணவகம், அலுவலகம், பூங்கா, வாகனங்கள் போன்ற இடங்களில் மற்றவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசித்தல் என இரண்டாம் நிலை சிகரெட் புகை சுவாசித்தல் போன்றவையும் இதய நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*