அலுவலகப் பணி செய்பவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி ஏற்படுவது அதிகமாக உள்ளது ஏன்?

office-women

அலுவலகங்களில் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வீடுகளில் கூட பெண்கள் சோபாவில் அமர்ந்து அசையாமல், ‘டிவி’ பார்க்கின்றனர். இப்படி நீண்டநேரம் அமர்ந்தே இருப்பதால் உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை, வலிமை, செயல்திறன் பாதிக்கப்படுகின்றன. அது குறித்து எச்சரிக்கும் விதமாக தான் வலி பிறக்கிறது. அந்த வலிக்கான வேரைத் தேடி அகற்றாமல், மருந்து, மாத்திரைகளில் நிவாரணம் தேட முயல்கிறோம். இது தற்காலிக ஆசுவாசம் தருமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது. ஒருவருக்கு கழுத்தில் வலி என்றால், அதற்கு கழுத்தில் தான் பிரச்னை இருக்கும் என்று கூறமுடியாது. இடுப்பு, கால் மூட்டு பகுதியில் பிரச்னை இருந்தால் கூட கழுத்தில் வலி ஏற்படலாம். அதை கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் கழுத்துவலிக்கு விடை கொடுக்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*