பல் தேய்க்கும்போது ரத்தம் வருகிறதா….

bleeding-gums

கடினமாக, அழுத்தமாகப் பல் தேய்ப்பதால் ரத்தம் வரும்.வைட்டமின் சி குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை. பெண்களுக்கு, சில வகை ஹார்மோன் மாற்றங்களால்கூட ரத்தம் வர வாய்ப்புகள் உள்ளன. இப்படிப் பல காரணங்கள் இருந்தாலும், எப்போதுமே மென்மையான பிரஷ்ஷைக்கொண்டு, மெதுவாகப் பல் தேய்க்கும் பழக்கமே நல்லது.மென்மையாகப் பல் துலக்குவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுவது போன்ற பழக்கங்கள், ரத்தம் கசிவதைத் தடுக்கும். இப்படிச் செய்தும் ரத்தம் கசிவது நிற்கவில்லை என்றால், மருத்துவரை அவசியம் சந்திக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து, ஜெனரல் செக்கப் செய்துகொள்வது நல்லது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*