பண்டிகைக்காலச் சமையல் : நெய் அப்பம்

karthigai appa

என்னென்ன தேவை :- கோதுமை மாவு – ஒரு கப்,அரிசி மாவு – கால் கப்,வெல்லத் தூள் – முக்கால் கப்,தேங்காய்த் துருவல் – கால் கப்,ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்,பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,பால் – முக்கால் கப்,நெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது:- கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லத் தூள், தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, பேக்கிங் சோடா இவற்றை நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெதுவெதுப்பான பாலை அதில் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். பேக்கிங் சோடா சேர்க்க விரும்பாதவர்கள், அதற்குப் பதில் ஒரு வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.கரைத்த மாவை, பத்து நிமிடம் ஊறவிடுங்கள். ஆப்பச் சட்டியில் நெய் விட்டுச் சூடானதும் மாவுக் கலவையை ஊற்றுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிடுங்கள். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் நெய் வடித்து, எடுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*