உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?

neckpain

சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் ‘முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் ‘ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*