மஷ்ரூம் ஆம்லெட்

hearty_mushroom_omelette-2

தேவையானவை:சிப்பிக் காளான் – 200 கிராம்,முட்டை – 4,பெரிய வெங்காயம் – 50 கிராம் ,பச்சைமிளகாய் – 3,தக்காளி – 50 கிராம்,இஞ்சி – ஒரு சிறிய துண்டு,பூண்டு – 3 பல்,கொத்தமல்லித்தழை – சிறிதளவு,கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,மிளகுத்தூள் – சிறிதளவு,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். ஒவ்வொரு காளானையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கலவையை இறக்கி ஆறவிடவும்.
ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தேய்த்து அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி, இதன் மேல் வதக்கிய கலவையைப் பரவ விட்டு சிறிது நேரம் வேக விடவும், பின்பு, ஆம்லெட்டை இரண்டாக மடித்து, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். ஆம்லெட்டின் மேல் மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*