தினம் ஒரு ஜூஸ் : அன்னாசி – எலுமிச்சை மிக்ஸ்டு ஜூஸ்

pineapple-juice-recipe-250
தேவையானவை: அன்னாசிப் பழத் துண்டுகள் – 4 (வட்டமாக வெட்டியது), சிறிய எலுமிச்சைப் பழம் – 1, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.

செய்முறை: அன்னாசிப் பழத் துண்டுகளுடன், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். தேவைப்படுபவர்கள், ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்
* வைட்டமின் சி சத்து நிறைந்த ஜூஸ் இது. இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு முதலான தாதுஉப்புகள் இதில் நிறைந்து இருக்கின்றன.
* ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
* இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
* வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸைக் குடிக்கக் கூடாது. உடல்நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம்.
* காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ எடுத்துக்கொள்ளக் கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*