சிறுதானிய அடை

millet adai

தேவையான பொருட்கள் : கம்பு – கால் கப்,கேழ்வரகு – கால் கப்,சோளம் – கால் கப் ,கொள்ளு – கால் கப்,பாசிப் பயறு – கால் கப்,குதிரைவாலி – கால் கப்,சாமை அரிசி – கால் கப்,வரகரிசி – கால் கப்,முழு கறுப்பு உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,கொண்டைக்கடலை – 4 டீஸ்பூன்,வெங்காயம் – 1,இஞ்சி – சிறிய துண்டு,ண்டு – 10 பல்,உப்பு – சுவைக்கு,
எண்ணெய் – சிறிதளவு,முருங்கை கீரை – 2 கைப்பிடி

செய்முறை :
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி, முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை அனைத்தையும் காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். * இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.* அரைத்த மாவை உப்பு, முருங்கை கீரை போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அடையாகத் ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*