மூங்தால் கிச்சடி

moong dal khichdi

தேவையானவை: பச்சரிசி – 1 கப்,பயத்தம்பருப்பு – அரை கப்,உப்பு – தே.அளவு,காய்கறிகள் – 1 கப் (விருப்பமான காய்கள்),மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,தாளிக்க:நெய் – 1 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கவும்,
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்,சீரகம் – அரை டீஸ்பூன்,மெல்லியதாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை – 1 கொத்து
தூவி இறக்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:: ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 3 கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு தாளிக்க வேண்டியதை சேர்த்து தாளித்து வதக்கவும். இவற்றை வெந்த சாதம் பருப்பு கலவையில் சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*