வீட்டுக்கடனை செலுத்தி முடிக்கும்போது

housing loan

* வீட்டுக்கடனுக்காக விண்ணப்பித்த சமயத்தில், அந்த விண்ணப்பத்தில் ‘சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்’ என ஒரு பட்டியல் இருந்திருக்கும். கடனை முடிக்கும்போது அந்த பட்டியலை அவசியம் பார்த்து அனைத்து அசல் ஆவணங்களும் மீண்டும் கைக்கு வந்து விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* வீட்டுக்கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் எந்த சொத்தின் மீது கடன் வழங்கப்பட்டதோ அதன் முகவரி, கடன் வாங்கியவரின் பெயர் மற்றும் அந்த கணக்கின் எண் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
* கடனை செலுத்தி முடிக்கும்போது, குறிப்பிட்ட சொத்தின் மீது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு பிணை உரிமை (லிமிணிழி) நீங்கி விட்டதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் பற்றுரிமை எஞ்சியிருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட சொத்தை விற்கும்போது பிரச்சினைகள் உருவாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*