தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா

yoga mudhra

முதலில் விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும்.இப்படி இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்த பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழ வேண்டும்.

பயன்கள் :

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும்.இந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*