இளநீர் ஆப்பம்

ilaneer appam

என்னென்ன தேவை : பச்சரிசி – 1 கப்,புழுங்கல் அரிசி – 1 கப்,உளுந்து – கால் கப்,இளநீர் – 1 கப்,ஈஸ்ட் – ஒரு ஸ்பூன்,பால் – சிறிதளவு,எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது :
* முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
* ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.
* பின்னர், ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான இளநீர் ஆப்பம் ரெடி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*