தொடை, கைகளை வலுவாக்கும் நமஸ்கராசனம்

namaskarasana

செய்முறை :

விரிப்பில் கால்களை அகட்டி வைத்துப் பாதங்களில் உட்காரவும். முழங்கைகள் முழங்கால்களுக்கு இடையில் இருக்கட்டும். சாமி கும்பிடுவது போல் கைகளை இணைத்து மார்புக்கு முன்னால் வைக்கவும். முழங்கைகளைப் பயன்படுத்தி முழங்கால்களை எவ்வளவு தள்ள முடியுமோ அந்த அளவு தள்ளவும்.பின்னர் தலையை முன்னால் குனிந்து அதே சமயம் கூப்பிய கைகளை முன்னே நீட்டவும். இதே நிலையில் மூன்று விநாடிகள் மூச்சை நிறுத்தி இருக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யலாம்.

பலன்கள் : தொடை, கைகளில் உள்ள தசைகள் வலுப்பெறும்.நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெரும்.இடுப்பின் வளையும் தன்மை அதிகரிக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*