அம்மாக்களின் கவனத்துக்கு..

infant_baby

* குழந்தைக்குப் பால் புகட்டியதும் தோளில் போட்டு முதுகைத் தடவிக்கொடுத்து, ஏப்பம் வரச் செய்யவும். இதனால் அதன் வயிற்றில் இருந்த காற்று வெளியேற்றப்பட்டு, உணவு சிறுகுடலுக்குச் செல்ல வழி ஏற்படும்.
* பால் கொடுத்ததும் குழந்தையின் உடலை அதிக அசைவுகளுக்கு உள்ளாக்கினால், அது பாலைக் கக்கலாம்.
* இரண்டு மாதங்களில் குழந்தையின் பார்வைத்திறன் முழுமையடையும். அப்போது ஆடைகள், பொம்மைகள் என வண்ணப் பொருட்களை ஆர்வமுடன் பார்ப்பார்கள். சத்தத்துக்காகத் தங்கள் கொலுசை ஆட்டி ஆட்டி விளையாடுவார்கள். அது அவர்கள் உடலுக்கு ஒருவகைப் பயிற்சியாகவும் அமையும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*