பிரியாணிக்கு எந்த சைடிஷ் சிறப்பு…!

biryani sidedish

* பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம். இது உணவில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
* பிரியாணியுடன் கேரட், வெள்ளரி, முட்டைகோஸ், வெங்காயம் போன்றவற்றை வேகவைக்காமல், அப்படியே சாலட்போல சேர்த்துக்கொள்வது நல்லது. இது, செரிமானத்துக்கு உதவும். கொழுப்பைக் கரைக்கும்.
* பிரியாணிக்கு சைடுடிஷ்ஷாக புதினா துவையல் சாப்பிடலாம். மந்தமான நிலையை புதினா போக்கும்; புத்துணர்ச்சி கொடுக்கும்; அசைவம் சாப்பிட்ட வாடையைப் போக்க புதினா உதவும்.
* கத்திரிக்காய் கொத்சு பிரியாணியுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இதில் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகத் தூள் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*