மூலிகை சமையல் : பூண்டு லேகியம்

poondu legiyam

தேவையானவை: நாட்டு பூண்டுப் பல் – 12 முதல் 20 வரை, பால் – 100 மில்லி, கருப்பட்டி அல்லது வெல்லம் – 100 கிராம், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பூண்டுப் பற்களைப் பாலில் வேகவைக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும் (மிக்ஸியில் அரைத்தும் எடுக்கலாம்). கருப்பட்டி (அ) வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் பூண்டு விழுது, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகி சுருண்டு வரும்போது மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சுருளக்கிளறி இறக்கவும். ஆறியபின் பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.

பயன்: உணவுக்கு முன் அல்லது பின் இந்த லேகியத்தை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர ஜீரணம், வயிற்றுப் பொருமல், மாந்தம் சரியாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*