கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : கைமுறுக்கு

kai muruku

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 2 கப், பொட்டுக்கடலை – கால் கப், வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், எள் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும். இதை கெட்டியாக அரைத்த அரிசி மாவில் கலந்து வெண்ணெய், எள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். தேவையான அளவு மாவை எடுத்து மூன்று சுற்று அல்லது விரும்பிய அளவில் முறுக்காகச் சுற்றவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*