ஏ.சி பராமரிக்கும் முறை

கடந்த சில மாதங்களாகக் குளிர்காலம் என்பதால் ஏ.சி-யை பயன்படுத்தாமலே இருந்திருக்கிறார்கள். தற்பொழுது வெயில்காலம் தொடங்கிவிட்டதால் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தீப்பற்றி எரிந்திருக்கிறது.

பயன்படுத்தாமல் இருந்தபோது தூசி மற்றும் ஒட்டடைகள் அடைந்து உள்ளேயே சேகரமாகியிருக்கிறது. மின்சாதனப் பொருள்களில் இயல்பாகவே வெப்பம் உருவாகும். சர்வீஸ் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தூசி, ஒட்டடை சூடேறி தீப்பற்றி எரிந்திருக்கிறது.

ஏ.சி-யில் கேஸ் இருப்பதால் வெடித்து பெரிய அளவில் ஆபத்து நேர்ந்திருக்கிறது. அதனால் ஏ.சி-யை 6 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஏ.சியைவிட பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஏ.சி-யில் தான் ஆபத்து அதிகம்.

ஏ.சி பயன்படுத்தும் அறைகளின் ஜன்னல் கதவுகளின் ஏதேனும் ஒன்றையாவது லேசாகத் திறந்து வையுங்கள். புகை வெளியேறாததால் தூக்கத்திலேயே பலர் இறந்ததும் உண்டு. லோ சர்க்யூட் போன்ற காரணங்களாலும் தீப்பிடிக்கக்கூடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*