ஓணம் ஸத்யா : பழப் பிரதமன்

தேவையானவை:

நேந்திரம் பழம் – 4 (சிறிய துண்டுகளாக்கி, வேகவைத்து மசிக்கவும்)
ஜவ்வரிசி – 1/3 கப்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – ஒரு கப்
வெல்லத்தூள் – ஒன்றரை கப்
கெட்டித் தேங்காய்ப்பால் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
வறுத்த முந்திரி – சிறிதளவு

செய்முறை:

ஜவ்வரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, தனியாக வேகவிடவும். வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி, மசித்த பழத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த ஜவ்வரிசி சேர்த்துக் கிளறவும். பிறகு வெல்லக் கரைசலை ஊற்றி, கொதிக்கவிட்டு இறக்கவும். அதனுடன் பால், தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் மெல்லிதாக சீவிய தேங்காய்ப் பற்களை வறுத்தும் சேர்க்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*