இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு…!

“அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்”
இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு.

நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை… பிரச்னை… பிரச்னை… எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை… பிறகு அதன் பின் ஓட்டம்… இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை… பிரச்னை… பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்… தீர்வுகளைத் தேடாமலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போகும்!பிரச்னை என்று வருகிற பலரும், ‘எங்களால இனியும் ஒண்ணா இருக்க முடியாது.

பிரியறதுதான் தீர்வு’ என்கிற முடிவுக்குத் தயாராக இருக்கிறார்கள். ‘பஞ்சாயத்து பண்ணுகிறேன்’ என்கிற பெயரில், அவர்களுக்குச் சமரசம் பேச வருகிறவர்களும், இருவரிடமும் அவரவர் தரப்பில் என்ன பிரச்னை எனக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்குப் பதில், பெரிதாக்கவே செய்கிறார்கள். அதைத் தவிர்த்து, பிரச்னைகளை ஒரு பக்கம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை நெருக்கமாக்குவதில் கவனம் செலுத்திப் பாருங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*