உங்களை இளமையாகும் கிரீன் டீ செய்முறை

green tea cup

தேவையானவை:

கிரீன் டீ இலைகள் (about 1 tsp. per cup of water)
சூடான நீர்

செய்முறை:

முதலில் எத்தனை கப் கிரீன் டீ வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.காய்ச்சி வடிக்க ,5 g கிரீன் டீ இலைகளுக்கு ஒரு கப் தண்ணீர் தேவைப்படும்.

தேவையான அளவு கிரீன் டீ இலைகளை,டீ வடிகட்டியில் எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஒரு 80 டிகிரி அளவிற்கு சூடு செய்யுங்கள்

கிரீன் டீ இலைகள் நிரப்பப்பட்ட வடிகட்டியை ஒரு காலியான குவளை அல்லது கோப்பை மீது வையுங்கள்.

சூடாக இருக்கும் நீரை,கிரீன் டீ இலைகளின் மீதாக,கோப்பையில் ஊற்றவும்.

2-4 நிமிடங்களுக்கு,கிரீன் டீ இலைகள் உள்ள வடிகட்டியை மூழ்க எடுக்கவும்.நேரம் அதிகமானால் , டீ கசப்பு சுவையை தரும். வடியை வெளியே எடுக்கவும்.

இப்பொழுது கோப்பையில் உங்கள் கிரீன் டீ ரெடி!சூடாகும் குடிக்கலாம்.ஆற வைத்தும் குடிக்கலாம்.

இது சிறிது கசப்பும் இனிப்பும் கலந்தது போல் இருக்கும்.விரும்பினால் சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.சர்க்கரை வேண்டாம் என்றால் தேன் சேர்த்து அருந்தலாம்.உடல் நலத்தை ப்பாதுகாக்கலாம்.

சீனாவை பிறப்பிடமாகக்  கொண்ட கிரீன் டீ என்பது ஒரு அருமையான பானமாகும்.இதில் பல நன்மைகள் மறைந்துள்ளன.இது உங்களை இளமையாக வைத்திருக்க உதவும்.உடல் எடையை குறைக்கும்.கேன்சர் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.இன்னும் இதில் உள்ள பலன்கள் அதிகம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*