சமோஸா செய்யத் தேவையானவை

samosa

செய்யத் தேவையானவை:

மேல்மாவிற்கு : மைதா மாவு (1 கப்)
உப்பு சிறிது

மைதா மாவு,உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மிக மிக மெல்லிய பூரிகளாக தேய்க்கவும்.

பூரணத்திற்கு : கோஸ் ,காரட் துறுவி வைத்து கொள்ளவும் , வெங்காயம் சிறிதாக நறுக்கியது எல்லவற்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும், சிறிதாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்த மல்லி தழை, விருப்பப்பட்டால் இஞ்சி-பூண்டு சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய காய்களை, சிறிது மசால் தூள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும்.வட்டமாக தேய்த்த பூரியை பாதியாக கத்தியால் அரை நிலா வடிவமாக வெட்டி பிரித்துக்கொள்ளவும். வெடிய பாதியை சுண்டல் பொட்டலம் மடிப்பதுபோல் மடித்துக்கொள்ளவும் இதில் சிறிது வதக்கிய பூரணத்தை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஒட்டவும். பின்னர் காய்ந்த எண்ணையில் பொன் நிறம் வரும்வரை பொறித்து எடுக்கவும்.சுவையான சமோஸா ரெடி .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*