சுவையான மோர் குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.

More_Kulambu-300x230

தேவையான பொருட்கள்

தயிர் – 2 கப்
மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
காய் – பூசணிக்காய், மேரக்காய்,வெண்டைக்காய்(விருப்பத்திற்கேற்ப)

தாளிக்க

கடுகு – 1 / 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 / 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயம் – 1 / 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி

அரைக்க

பச்சைமிளகாய் – 5
தனியா – 1 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி
பச்சரிசி – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
மல்லிதழை – சிறிது
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி

செய்முறை

மல்லிதழை , தேங்காய்துருவல் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து ,
அரைக்கும்போது மல்லிதழை , தேங்காய்துருவல் சேர்த்து அரைக்கவும்.
தயிரை லேசாக அடித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை தயிர், மஞ்சள்தூள், உப்புடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
காயை நறுக்கி தனியே வேக வைத்து இதனுடன் சேர்க்கவும்.
கடுகு, வெந்தயம், மிளகாய், பெருங்காயம் தாளித்து, கலந்து வைத்த கரைசலை இதில் ஊற்றவும்.
நுரை கட்டி வந்ததும் இறக்கி வைக்கவும்.

நன்றி: tamilcook.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*