மு‌ட்டை ‌மிளகு தோசை செ‌ய்யு‌ம் முறை

egg dosa

தேவையானவை :

தோசை மாவு – 2 க‌ப்
மு‌ட்டை – 2
‌மிளகு தூ‌ள் – 1 ‌தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு – தேவையான அளவு
எ‌ண்ண‌ெ‌‌ய் – தோசை சுடுவத‌ற்கு
செ‌ய்யு‌ம் முறை :
முத‌லி‌ல் தோசை மாவை உ‌ப்பு போ‌ட்டு ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் ஒரு ‌சி‌ட்டிகை உ‌ப்பு, இர‌‌ண்டு ‌சி‌ட்டிகை ‌மிளகு தூ‌ள் போ‌ட்டு ‌சில து‌‌ளிக‌ள் த‌ண்‌‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கல‌ந்து, அ‌தி‌ல் ஒரு மு‌ட்டை உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து‌ வை‌க்கவு‌ம்.

தோசை‌க் க‌ல் ந‌ன்கு கா‌ய்‌ந்‌தது‌ம் தோசைமாவை ஊ‌ற்‌றி தோசை அள‌வி‌ற்கு தே‌ய்‌‌த்து‌விடவு‌ம்.

அத‌ன் ‌மீது அடி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மு‌ட்டையை ஊ‌ற்‌றி ந‌ன்கு பர‌ப்‌பி ‌விடவு‌ம். தோசையை‌ச் சு‌ற்‌றி எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றவு‌ம்.

‌தோசை ந‌ன்கு வெ‌ந்தது‌ம் ‌திரு‌ப்‌பி போ‌ட்டு ஒரு ‌சில நொடிக‌ளி‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.

சுவையான ‌மு‌ட்டை ‌‌மிளகு தோசை‌த் தயா‌ர்.

கு‌றி‌ப்பு – தோசை வா‌ர்‌க்கு‌ம் போது ‌சி‌றிது தடினமாக வா‌ர்‌த்தா‌ல் ந‌ன்றாக இரு‌க்கு‌ம். ஒரு தோசை‌க்கு ஒரு மு‌ட்டை ‌வி‌கித‌ம் ச‌ரியாக இரு‌க்கு‌ம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*