ஏசியில் மின் சிக்கனம்

single-room-air-conditioner1

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம். பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும். இந்த அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*