அதிக சத்துக்கள் நிறைந்த நேந்திரம் பழம்..!

nendhirm pazham

கேரளாவில் அபரிமிதமாக விளையும் பழம் இது. நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது. மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம். இந்த பழத்தில் நல்ல சத்துக்கள் அதிகளவு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் இது.

இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து 48 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் உடல் எடை கூடுவார்கள்.

நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள் சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். இதனை பழமாக சாப்பிட்டால் தான் முழு பலனையும் பெற முடியும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*