நள்ளிரவில் சுதந்திரம்…ஏன்? அறிவோம் சரித்திரம்..!

happy-independence-day

இது குறித்து, லார்ரி கோலின்ஸ் மற்றும் டொமினிக் லபிரே ஆகியோர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ (பீரிடம் அட் மிட் நைட்) என்ற புத்தகத்தில் மவுண்ட் பேட்டன் கூறுகையில், ‘இந்தியாவுக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் சுதந்திரம் வழங்க நினைத்தேன். அதையடுத்து ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் வழங்க முடிவு செய்தேன்.

ஏனென்றால் அன்றுதான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த 2-ம் ஆண்டு நினைவு நாளாகும். ஆனால், குண்டு வீச்சு தொடர்பான நாளன்று சுதந்திரம் வழங்குவதை கோடிக்கணக்கான இந்துக்கள் விரும்பவில்லை.

ஆகஸ்டு 15-ந் தேதி அன்று சுதந்திரம் வழங்குவதாக அறிவித்ததற்கு ஆச்சரியமும், கடும் பீதியும் அடைந்தனர். ஏனெனில் ஆகஸ்டு 15-ந் தேதியை அபசகுண நாளாகவும், ஏளனம் செய்வதாகவும் கருதினர்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய முறைப்படி ஆகஸ்டு 15-ந் தேதி நள்ளிரவு பிறக்கிறது. எனவே இரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்து பஞ்சாங்கப்படி அன்று மங்கலகரமான நாளாகவும் அமைத்தது.

எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*