குறள் 26 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 21, 2018 Tamil Kuripugal 0

குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். விளக்கம்: பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும். […]

குறள் 25 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 18, 2018 Tamil Kuripugal 0

குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. விளக்கம்: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் […]

No Picture

குறள் 24 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 17, 2018 Tamil Kuripugal 0

குறள் 24 உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. விளக்கம்: உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான். பால்: அறம் இயல்: பாயிரவியல் […]

குறள் 41 அறம் இல்லறவியல் இல்வாழ்க்கை

March 17, 2018 Tamil Kuripugal 0

குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. விளக்கம்: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். பால்: அறம் இயல்: இல்லறவியல் […]

No Picture

குறள் 23 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 16, 2018 Tamil Kuripugal 0

குறள் 23 இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. விளக்கம்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள். பால்: அறம் இயல்: பாயிரவியல் அதிகாரம்: […]

No Picture

குறள் 22 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 15, 2018 Tamil Kuripugal 0

குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. விளக்கம்: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. […]

No Picture

குறள் 21 அறம் பாயிரவியல் நீத்தார் பெருமை

March 14, 2018 Tamil Kuripugal 0

குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. விளக்கம்: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும். பால்: அறம் இயல்: பாயிரவியல் அதிகாரம்: நீத்தார் பெருமை  […]

No Picture

குறள் 20 அறம் பாயிரவியல் வான்சிறப்பு

March 13, 2018 Tamil Kuripugal 0

குறள் 20 நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. விளக்கம்: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பால்: அறம் இயல்: […]

No Picture

குறள் 19 அறம் பாயிரவியல் வான்சிறப்பு

March 12, 2018 Tamil Kuripugal 0

குறள் 19 தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். பால்: அறம் […]

No Picture

குறள் 14 அறம் பாயிரவியல் வான்சிறப்பு

March 11, 2018 Tamil Kuripugal 0

குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். விளக்கம்: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். பால்: அறம் இயல்: பாயிரவியல் அதிகாரம்: வான்சிறப்பு […]