No Picture

குறள் 99 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 22, 2015 Tamil Kuripugal 0

குறள் 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. விளக்கம்: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் […]

No Picture

குறள் 98 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 21, 2015 Tamil Kuripugal 0

குறள் 98 சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். விளக்கம்: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை கூறல்

No Picture

குறள் 97 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 20, 2015 Tamil Kuripugal 0

குறள் 97 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். விளக்கம்: பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை […]

No Picture

குறள் 96 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 20, 2015 Tamil Kuripugal 0

குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். விளக்கம்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். பால்: அறம்இயல்: […]

No Picture

குறள் 95 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 19, 2015 Tamil Kuripugal 0

குறள் 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. விளக்கம்: தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா. பால்: அறம்இயல்: […]

No Picture

குறள் 94 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 18, 2015 Tamil Kuripugal 0

குறள் 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. விளக்கம்: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை கூறல்

No Picture

குறள் 93 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 17, 2015 Tamil Kuripugal 0

குறள் 93 முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். விளக்கம்: பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும். பால்: அறம்இயல்: […]

No Picture

குறள் 92 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 16, 2015 Tamil Kuripugal 0

குறள் 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். விளக்கம்: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உ்ளளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை […]

No Picture

குறள் 91 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 3, 2015 Tamil Kuripugal 0

குறள் 91 இன்சொலால் ஈ.ரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம்: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை கூறல்

No Picture

குறள் 88 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

June 30, 2015 Tamil Kuripugal 0

குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். விளக்கம்: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: விருந்தோம்பல்